முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிக்கப்படும் பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு மத்திய அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: கற்பழிப்பு, ஆசிட் வீச்சு போன்ற பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் இந்த நஷ்ட ஈட்டின் தொகை மாறுபடுகிறது. எனவே குறைந்தபட்சம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நஷ்ட ஈடு வழங்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மத்திய சட்ட சேவை வாரியம் மத்திய அரசுடன் கலந்து பேசி புதிய நஷ்ட ஈடு திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் கற்பழிப்பில் உயிரிழக்கும் பெண்களுக்கு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல் பலரால் கூட்டாக கற்பழிக்கப்படும் பெண்களுக்கும், ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நபர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.

இதன்படி கற்பழிப்பில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சம் வரையிலும் இயற்கைக்கு மாறான பாலியல் பிரச்சினையில் பாதிக்கப்படும் நபருக்கு  ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ. 7 லட்சம் வரையிலும் பாலியல் குற்றத்தில் கர்ப்பம் அடைந்தால் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சம் வரையிலும் கற்பழிப்பில் கர்ப்பமானால் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சம் வரையிலும், திராவகம் வீச்சு மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சம் வரையிலும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்ட வரையறை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இது போன்ற குற்றங்களில் ஆண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வகையில் திட்டங்கள் வரையறை செய்யவில்லை. இது சம்பந்தமாக நீதிபதிகள் மதன்லோகூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறும்போது, மைனராக உள்ள சிறுவர்கள் இது போன்ற குற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் அம்சங்களை சேர்க்கும்படி உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து