இந்தியன் வங்கி நிகர லாபம் சரிவு

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      வர்த்தகம்
Indian-Bank-Logo 2016 11 15

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் நான்காவது காலாண்டு நிகர லாபம் 59 சதவீதம் சரிந்து ரூ.131.98 கோடியாக உள்ளது. வாராக்கடன் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதால் நிகர லாபம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.319.70 கோடியாக இருந்தது. இது தொடர்பாக இந்தியன் வங்கி பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.4,954 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.4,601 கோடி மொத்த வருமானம் ஈட்டியது. எனினும் வாராக்கடனுக்கான ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் முடிவடைந்த காலாண்டில் மொத்த வாராக்கடன் 7.47 சதவீதத்திலிருந்து 7.37 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து