முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள்

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. என்ஜினியரிங் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.
மாநில அளவிலான ஜூனியர் செஸ் மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான செஸ் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட கேரம் கழக தலைவர் ஜி.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரி சேர்மன் ரகுராமன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மகேந்திரன், மாவட்ட செஸ் கழக துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சௌந்திரராஜன், தமிழக கால்பந்து கழக பொது செயலாளர் ஸ்டீபன் பாலசாமி , மாவட்ட கேரம் கழக செயலாளர் அப்துல் நசீர், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து