முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து இளவரசரின் திருமணத்தை கொண்டாடும் மும்பை டப்பாவாலாக்கள்

சனிக்கிழமை, 12 மே 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் திருமணத்தை மும்பை டப்பாவாலாக்கள் வித்தியாசமான முறையில் கொண்டாட இருக்கின்றனர்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும், ஹாலிவுட் நடிகை மேஹன் மார்கலுக்கும் வரும் 19-ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் லண்டனில் உள்ள விண்ட்சர் கேஸ்டில் அரண்மனையில் நடக்கிறது. இந்தத் திருமணத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த மும்பை டப்பாவாலாக்கள் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை, கே.இ.எம். மருத்துவமனை, வாடியா மருத்துவமனை ஆகியவற்றுக்குச் சென்று நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட உள்ளனர்.

இது குறித்து மும்பை டப்பாவாலாக்களின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் தலேக்கர் நிருபர்களிடம் கூறியதாவது,

டப்பாவாலாக்களாகிய எங்களுக்கும், இங்கிலாந்து ராஜ குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இளவரசர் சார்லஸ் அவரின் 2-வது திருமணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் எங்களைத் தனிப்பட்ட முறையில் அழைத்திருந்தார். நாங்கள் அங்கு சென்றிருந்த போது, எங்களை மிக சிறப்பாக கவனித்துக் கொண்டனர். மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள். வரும் 19-ம் தேதி இளவரசர் ஹாரியின் திருமணம் நடைபெற உள்ளது. அதைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்க இருக்கிறோம். மேலும், இங்கிலாந்து தூதரகத்திலும் இளவரசர் ஹாரிக்காக சிறப்புப் பரிசுகளையும் அளிக்க இருக்கிறோம். இவ்வாறு சுபாஷ் தலேக்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து