முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 150 இடமெல்லாம் கிடைக்காது: மல்லிகார்ஜூன கார்கே

சனிக்கிழமை, 12 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவில் வெற்றி பெறுவோம் என கனவு காணும் பா.ஜ.க.வுக்கு 60-70க்கும் மேற்பட்ட இடங்களில் கூட வெற்றி கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே பசவநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கர்நாடகாவில் பா.ஜ.க.  150 இடங்களை எல்லாம் வெற்றி பெறவே முடியாது, வேண்டுமென்றால் வெற்றி பெறுவது போல கனவு காணலாம். 60-70க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறாது என்று நாங்கள் உறுதியாக கூறுவோம். பா.ஜ.க.வினர் ஆட்சி அமைப்போம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. என்ன முயற்சி எடுத்தாலும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவே முடியாது. காங்கிரஸ் 150-க்கும் அதிகமான இடங்களை கண்டிப்பாக பெறும் என்று மல்லிகார்ஜூன தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து