முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களித்த 111 வயது சுவாமிஜி

சனிக்கிழமை, 12 மே 2018      இந்தியா
Image Unavailable

துமகுரு : நடக்கும் தெய்வம் என்று அழைக்கப்படும் 111 வயது ஸ்ரீ ஷிவக்குமார சுவாமிஜி, கர்நாடக சட்டசபை தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார்.

ஏராளமானோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுவாமிஜி, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை ஒரு தேர்தலைக் கூட புறக்கணிக்காமல், ஒவ்வொரு முறையும் தனது வாக்கினை செலுத்தி வருகிறார். தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு தனது வாக்கினை செலுத்தி விடுவார். இந்த தள்ளாத வயதிலும் அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும், தனது பூஜைகளை அதிகாலையிலேயே தொடங்கி விரைவாக முடித்து விட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களிக்க வந்து வரிசையில் நின்று விடுவார் சுவாமிஜி. ஆனால், இந்த தேர்தலில் முதல் முறையாக, வயோதிகம் காரணமாக அவ்வளவு விரைவாக வாக்குச்சாவடிக்கு வர முடியவில்லை. தனது சிஷ்யர்களுடன் 10.15 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார் சுவாமிஜி. சுதந்திர இந்தியாவில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தனது வாக்கினை செலுத்தி ஒரு சாதனையை அவர் படைத்துள்ளார்.

இது குறித்து அவரது மடத்தின் அதிகாரி கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த தேர்தல்களில் வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. அப்போதும் சுவாமிஜி தனது வாக்கினை செலுத்தியுள்ளார் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து