முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல், பாகுபாடு காரணமாக சமூக கட்டமைப்பு சீர்குலைகிறது: துணை ஜனாதிபதி வருத்தம்

சனிக்கிழமை, 12 மே 2018      இந்தியா
Image Unavailable

பனாமா: ஊழல், பாகுபாடு, சுரண்டல் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவது உள்ளிட்ட காரணங்களால்தான் உலகெங்கிலும் சமூக கட்டமைப்பு சீர்குலைந்து வருகிறது என்று  இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

அமைதியின்மை, கோபம், கிளர்ச்சி, பயங்கரவாதம் ஆகியவை இதன் வெளிப்பாடாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

பனாமா நாட்டுக்கு சென்றுள்ள வெங்கய்யா நாயுடு, அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது, தற்போதைய உலகில் மக்களிடையே தொடர்பின்மை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வறுமை, சமத்துவமின்மை போன்ற அடிப்படை பிரசனைகளுக்கு தீர்வுகாண உலக அளவில் கூட்டு முயற்சி அவசியம் என்றும் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தினார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எவ்வளவு விரைவில் தீர்வு காணுகிறோமோ அவ்வளவுக்கு நல்லது என்றார் அவர். இதைத்தொடர்ந்து, 40 நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் வெங்கய்யா நாயுடுவிடம் உரையாடினர். இந்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை அவர்கள் பாராட்டினர். மேலும், இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, பெருவியா நாட்டு தலைநகர் லிமாவுக்கு வெங்கய்யா நாயுடு சென்றடைந்தார்.
முன்னதாக, பனாமா நாட்டு அதிபர் ஜான் கர்லோஸ் வரேலா ரோட்ரிக்ஸை சந்தித்து, விவசாயம், வர்த்தகம், சுகாதாரம், கலாசாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து வெங்கய்யா நாயுடு ஆலோசனை நடத்தினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தரமல்லாத உறுப்பினராக பனாமாவை சேர்ப்பதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு தலைவர்களிடம் அவர் மீண்டும் உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து