முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானுக்கு எதிரான தோல்வி: பந்து வீச்சாளர்கள் ஆலோசனையை சரியாக செயல்படுத்தாததே தோல்விக்கு காரணம் - சி.எஸ்.கே கேப்டன் டோனி ஆதங்கம்

சனிக்கிழமை, 12 மே 2018      விளையாட்டு
Image Unavailable

ராஜஸ்தானிடம் தோல்வியடைந்ததற்கு, பந்து வீச்சாளர்கள் ஆலோசனையை சரியாக செயல்படுத்தாததே காரணம் என்று சி.எஸ்.கே கேப்டன் டோனி தெரிவித்தார்.

ராஜஸ்தான் பதிலடி

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணிக்கு பதிலடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் 5-வது வெற்றியை பெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. ரெய்னா 35 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி 1 சிக்சர்), வாட்சன் 31 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) டோனி 23 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

4-வது தோல்வி

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பட்லர் 60 பந்தில் 95 ரன் எடுத்து (11 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை நின்று வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். சென்னை சூப்பர் சிங்ஸ் அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது தொடர்பாக பந்து வீச்சாளர்கள் மீது கேப்டன் டோனி அதிருப்தி அடைந்து உள்ளார்.

செயல்படுத்தவில்லை...

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

176 ரன் என்பது நல்ல ஸ்கோர்தான். பந்து வீச்சாளர்கள் தோல்வி ஏற்பட்டது. நேர்த்தியாக பந்து வீசுவது பற்றி பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எப்படி பந்து வீச வேண்டும் என்பது பற்றியும் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. மோசமான பந்து வீச்சால் ஏராளமான பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தோம். இனிவரும் ஆட்டங்களில் பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். தற்போது விளையாடும் அணியே சிறந்த லெவனாக இருக்கிறது. பீல்டிங் நன்றாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெல்ல வேண்டும்...

ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும் அந்த அணி ஏற்கனவே சென்னையிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. வெற்றி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-

பட்லரின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி பெற்றுள்ளோம். பாராட்டு எல்லாம் அவரைதான் சாரும். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. கிருஷ்ணப்பா கவுதமின் 2 சிக்சர்கள் முக்கியமானது. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். இனிவரும் 3 ஆட்டங்களில் வெல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அணி 12-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை இன்று சந்திக்கிறது. புனேயில் இந்த ஆட்டம் நடக்கிறது. இதேபோல் ராஜஸ்தான் அணி மும்பை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து