முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல்: 11 பேர் பலி ஐ. எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      உலகம்
Image Unavailable

ஜாகர்த்தா: இந்தோனேசியாவில் கிறிஸ்துவ தேவாலயங்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இத் தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

முதலில், சுரபயாவில் உள்ள சான்டா மரியா ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தற்கொலைத் தீவிரவாதி உட்பட 4 பேர் பலியாகினர். 41 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் போலீஸ் காவலர்கள்.

அடுத்த தாக்குதல், டிப்போனெக்ரோவில் உள்ள ஒரு தேவாலயத்திலும் மூன்றாவ்து தாக்குதல் ஒரு பென்டகோஸ்ட் தேவாலயத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த போலீஸ் அதிகாரி ஒருவர், "மோட்டார் சைக்கிளில் பெண் ஒருவர் வந்தார். தேவாலயப் பகுதிக்குள் அவர் செல்ல முற்பட்டார். அவரைத் தடுத்து நிறுத்தினோம். ஆனால், அவர் எதிர்ப்புகளைக் கடந்து சென்றார். அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு பொதுமக்களில் ஒருவரைக் கட்டிப் பிடித்தார். பின்னர் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது" என்றார்.

இந்தோனேசியாவில் கடந்த 2002-ம் பாலி தீவுகளில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது 202 பேர் பலியாகினர். அதன் பின்னர் இந்தோனேசியாவில் தீவிர கண்காணிப்பு உள்ளது. இருப்பினும், சமீபகாலமாக அங்கு ஐ.எஸ் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து