பாரிஸில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்.. 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      உலகம்
Iss 2018 05 13

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதல் நேற்று இரவு நடந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள, ஒபேரா ஹவுஸ் என்ற பகுதியில் கத்தியுடன் வந்த தீவிரவாதி மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறான். அந்த பகுதியில் இருந்த மக்களை எல்லாம் வேகமாக ஓடி தாக்கி இருக்கிறார்.

அந்த ஒபேரா ஹவுஸுக்கு வெளியே இருந்த மக்களை எல்லாம் மோசமாக தாக்கியுள்ளான். சம்பவ இடத்திற்கு உடனே போலீஸ் வந்தது. தீவிரவாதியை பிடிக்க முடியாததால், போலீஸ் உடனே அவனை சுட்டு வீழ்த்தியது .


கத்தியுடன் வந்த தீவிரவாதி மக்கள் மீது தாக்கியதில் 2 பேர் பலி ஆகியுள்ளார். தாக்குதலால் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. மேலும் சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பிரான்ஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து