முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்ய வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஜமாத் அல் அஹர் பயங்கரவாத அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கக் கோரிய பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பதாக விமர்சித்ததையடுத்து இருநாடுகளிடையே தூதரக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் குறிப்பிட்ட தூரம் வரையிலும் மட்டுமே சென்றுவரலாம் என்றும். அதற்கு மேல் பயணிக்க 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி பெறவேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்து அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து