முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சித்தராமையா

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: இனி வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை 15-ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ள நிலையில் பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பா.ஜ.க கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று காலை டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா, இன்னும் 2 நாட்களுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நல்ல பொழுதுபோக்கை கொடுக்கும் என கூறியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை நம்புவது எல்லாம், ஒரு ஆற்றின் சராசரி ஆழம் 4 என்று புள்ளியியலாளர் சொன்னதை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம்.  எனவே கட்சியில் இருக்கும் அன்பானவர்களே, நலம் விரும்பிகளே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பார்த்து கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வார இறுதியை கொண்டாடுங்கள் என சித்தராமையா தெரிவித்துள்ளது அவரது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும், இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மைசூருவில் செய்தியாளர் சந்திப்பின் போது சித்தராமையா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து