முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு மகன் திருமணம்: அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா: ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பீகார் எம்.எல்.ஏ. சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடைபெற்றது.

பீகார் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் குடும்ப சகிதமாக கலந்துகொண்டனர்.

குறிப்பாக, மாநில கவர்னர் சத்யபால் மாலிக், முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பாஸ்வான், உபேந்திர குஷ்வாஹா, பா.ஜ.க. மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், சஞ்சய் நிருபம், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், தாரிக் அன்வர், ஐக்கிய ஜனதா தள அதிருப்தி அணி தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தள தலைவர் அஜித் சிங் உள்ளிட்டோரும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தனது மனைவி டிம்பிள் யாதவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். அதே போன்று, ஜார்கண்ட் அமைச்சர் சார்யூ ராய், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் கிருபாசங்கர் சிங் ஆகியோரும் திருமண விழாவில் பங்கேற்றனர்.

அவர்களைத் தவிர, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் லல்லுவின் மகன் திருமணத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால், அவர்கள் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வரவில்லை.
சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள லல்லு, தனது மகனின் திருமணத்தின் போது உற்சாகமாக காணப்பட்டார்.
குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் நிகழ்வுகளை அவர் முன்னின்று நடத்தினார். திருமணத்துக்கு வருகை தந்த அரசியல் தலைவர்களையும், மூத்த நிர்வாகிகளையும் மகிழ்ச்சியுடன் அவர் மேடைக்கு அழைத்துச் சென்றார். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வந்த போது அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவர்கள் இருவரும் நட்புடன் பேசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து