முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா-ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு 125 டி.எம்.சி.தண்ணீர்: கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் மிகப்பெரும் திட்டம் சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      தமிழகம்
Image Unavailable

சேலம்: கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம். இதன் மூலம் தமிழகத்திற்கு தெலுங்கானா - ஆந்திரா வழியாக 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பேசினார்.

சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து குரங்குசாவடி வரை ரூ.82.27 கோடி மதி்ப்பில் கட்டப்பட்ட புதிய பால திறப்பு விழா, ஆட்டையாம்பட்டி - மொசக்காளிப்பட்டியில் புதிய பால திறப்பு விழா, சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் நிலையம் மற்றும் தாரமங்கலத்தில் புதிய புறவழிச்சாலைக்கு அடிக்கல், சேலம் மணல்மேடு மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய விழாக்கள் ஏ.வி.ஆர்.ரவுண்டானா அருகில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி பாஜிபாகரே வரவேற்று பேசினார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர் செல்வம்,சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும்,சேலம் மேற்கு தொகுதி எம்.எல்..வுமான ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு தலைமை தாங்கி பாலங்கள் மற்றும் காவல் நிலையத்தை திறந்து வைத்தும்,புதிய சாலை மற்றும் உயர்மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டியும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,
இன்றைக்கு நீரினுடைய அவசியம் மிக முக்கியம்.  எல்லா நதிகளுமே பக்கத்து மாநிலத்திலிருந்து உற்பத்தியாகித்தான் நம்முடைய மாநிலத்திற்கு வருகிறது.  காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகிறது, முல்லைப் பெரியாறு கேரளாவில் உற்பத்தியாகிறது, பாலாறு ஆந்திராவிலிருந்து உற்பத்தியாகிறது.  இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் நான் வலியுறுத்திச் சொன்னேன்.  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னைக்கு வருகை தந்த பொழுது என்னிடத்தில் சொன்னார், நீங்கள் கடிதம் எழுதினீர்கள், பாரத பிரதமரிடத்திலும் கோரிக்கை வைத்தீர்கள்.  இன்றைக்கு கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம், ஆகவே, கோதாவரியில் அதிக நீர் வருகின்றது.  அந்த நீரை தெலுங்கானா, ஆந்திரா வழியாக நம்முடைய பகுதியாகிய மாயனூர் கேரேஜ் என்னும் இடத்தில் அந்த தண்ணீரை கொண்டு வந்து இணைக்க வேண்டும்.  அப்படி கோதாவரி தண்ணீர் 125 டி.எம்.சி. நமக்கு கொடுப்பதாக மத்திய அரசால் திட்டம் தீட்டப்படுகிறது.  இதன் மூலம் அந்த பகுதி மக்களுக்கு நிலையான நீர் கிடைக்கும்.  மேட்டூர் அணையில் இருக்கும் அந்த நீர் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டம் வரை கால்வாய் வெட்டி அதன் மூலமாக ஆங்காங்கு இருக்கின்ற ஏரிகளை நிரப்புகின்ற பொழுது மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயிகள் பயனடைவார்கள். 

இந்தியாவிலேயே வேளாண் துறை, மருத்துவத் துறை,  அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக விளங்கக்கூடிய நிலை தமிழகத்திலே பார்க்க முடிகின்றது.  கல்வித் துறையில் இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கை தமிழகம் தான் முன்னிலை வகிக்கின்றது.  சாலை போக்குவரத்திலும் தமிழகத்தில்தான் சாலை சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசே கூறியிருக்கிறது.  அந்த அளவிற்கு அம்மாவினுடைய அரசு எல்லா துறைகளிலும் வளர்ச்சியை காண்பதற்கு திட்டங்களை தீட்டியிருக்கிறது.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்.பி.ஆர்.சுந்தரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மேட்டூர் செ.செம்மலை, சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, ஓமலூர் வெற்றிவேல், சங்ககிரி ராஜா, ஏற்காடு சித்ரா, மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், சேலம் ஆவின் சேர்மன் சின்னதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.எம்.கே.செல்வராஜ், முன்னாள்மேயர் எஸ்.சவுண்டப்பன், முன்னாள் துணை மேயர் எம்.நடேசன், சேலம் மாநகர் மாவட்ட பகுதி கழக செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறை அதிகாரி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து