முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி தொடர்பான வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் மீண்டும் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காவிரிக்கான வரைவு திட்டம் இன்று சுப்ரீம் கோர்ட்டில் கண்டிப்பாக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டால் கொடுக்கப்பட்ட  கால அவகாசம் முடிந்த பின்பும் இன்னும் வாரியம் அமைக்கப்படவில்லை. இதுவரை 4 முறை சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு கெடு விதித்து விட்டது. இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று நடக்கிறது.

முன்பு நடந்த விசாரணையில் தமிழகத்திற்கு மே மாதம் 4 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட இயலாது என சுப்ரீ்ம் கோர்ட்டில் கர்நாடகா அறிக்கை அளித்துள்ளது. கர்நாடகா இப்படி மோசமாக பதில் அளித்துள்ள நிலையில் மத்திய அரசும் தொடர்ந்து காவிரி செயல்திட்டம் அமைக்க கூடுதல் அவகாசம் கேட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த அவகாசம் இன்று முடிகிறது. இதற்கிடையில் இன்று கண்டிப்பாக காவிரிக்கான வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் விசாரணையில் இன்று கண்டிப்பாக திட்டம் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முதலில் இந்த திட்டம் தயாராக உள்ளது என்றும், ஆனால் கர்நாடக தேர்தல் காரணமாக திட்டத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் இப்போதும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி விட்டதா என்பதை கூற முடியாது என்று நீர்வளத்துறை செயலாளர் குறிப்பிட்டு உள்ளார். தேர்தல் முடிந்த கையோடு பிரதமர் மோடி நேபாளத்திற்கு ஆன்மீக பயணம் சென்று விட்டார். இதற்கு இடைப்பட்ட சில மணி நேரங்களில் பிரதமர் மோடியிடம் காவிரி செயல் திட்டத்திற்கு கையெழுத்து வாங்கினார்களா என்ற விபரம் இன்றுதான் தெரியவருமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து