கோடை காலங்களில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை பயன்படுத்த வேண்டும். அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேண்டுகோள்

minister baskeran

         சிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்;சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் உணவு பாதுகாப்பு குறித்த “மேளா மே மாதம் முழுவதும்” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, முன்னிலையில்,  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  .ஜி.பாஸ்கரன்   தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு குறித்த கண்காட்சியினை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திறந்து வைத்து தெரிவிக்கையில்,
      பொதுமக்களுக்கு கோடை காலங்களில் தேவையான உணவை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனைப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் ஒருமாதம் காலத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் நான்கு வாரங்களுக்கு பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம் கோடை காலத்தில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். அதுமட்டுமின்றி தேவையற்ற உணவுகளை இக்காலகட்டத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதன் குறித்து பொதுமக்களிடம் இதன் மூலம் எடுத்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில் கோடை காலத்தில் ஒவ்வொருவருக்கும் நீர்ச்சத்தும் மற்றும் உப்புச்சத்துமே அதிகளவு தேவைப்படுவதாகும்.
     பொதுவாக உணவுக்கூடங்களில் தயாரிக்கும் உணவுகளை கலப்படமின்றி தயாரித்து தூய்மையாக பாதுகாத்து விநியோகிக்க வேண்டும். அதேபோல் பழச்சாறு தயாரிக்கும் மையங்களில் தன்சுத்தம், கைசுத்தம் பேணுகின்ற வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பால், தண்ணீர் மற்றும் பழங்கள், குளிர்பானம் தயாரிக்கும் மூலப்பொருட்கள் தரமான பொருளாகப் பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் விற்பனைக்கு வழங்கும் பொருட்களை சுத்தமாகவும் தரமாகவும் வழங்கினால்தான் பொதுமக்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது. அதுமட்டுமின்றி கலப்படமான பொருட்கள் விற்பனையில் இருப்பது கண்டறியப்பட்டால் அலுவலர்களின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். அலுவலர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.       
 சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக தன்னார்வலர்களாக பணிபுரிய பயிற்றுவிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்று உணவு வணிகர்கள்; பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான உணவை எவ்வாறு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான உணவை அறிந்து எவ்வாறு பயனடைய வேண்டும் என்பது குறித்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.  துறையின் சார்பாக துறை நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாதுகாப்பான உணவு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக  மொபைல் கார்ட் மற்றும் சாலையோர வியாபாரிகள், உணவகங்கள், உணவு விடுதிகளில் வழங்கப்படும் உணவு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் குறித்தான நலக்கல்வி, உட்கொள்ள வேண்டியவை, உட்கொள்ள வேண்டாதவை எப்பொழுது பழச்சாறுகள் அருந்த வேண்டும் அவை எப்படிபட்டவையாக இருக்க வேண்டும் எந்த அளவுள்ள குளிர்பதன நிலையில் அருந்த வேண்டும் எனபது குறித்ததான ப்ளக்ஸ் போர்;டுகள், கூடாரங்கள், உணவு பாதுகாப்பு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய வாட்ஸ்அப் எண்: 9444042322 ஆகியவை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உருவாக்க உள்ளனர். மேலும்  இத்துறையின் சார்பாக ஸ்டால்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் எது என்று தரம்பிரித்து விளக்கி காண்பிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்வதுடன் ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து பாதுகாத்திட வேண்டுமென  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்    தெரிவித்தார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ஜெகதீஸ் சுந்தரபோஸ், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், செல்லத்துரை, தியாகராஜன், ராஜேஸ்,முத்தமிழ், சாலைப்பாண்டியன், ஜோதிபாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து