வீரபாண்டி கவுமாரியம்மன் திருக்கோவில் கம்பத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். புனித நீர் ஊற்றி வழிபாடு

திங்கட்கிழமை, 14 மே 2018      தேனி
ops news

தேனி, -தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு, நேற்று திருக்கோவில் கம்பத்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தார்.
வீரபாண்டி அருள்மிக திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ம் தேதி முதல் நாளை 15-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.  இந்த திருவிழாவையொட்டி அரசு உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 
திருவிழாவையொட்டி கோவில் மற்றும் பிற பகுதிகள் என 50 சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலமும், தேவையான இடங்களில் சுழல் கேமிரா மூலமும், ஆற்றங்கரை பகுதி, பேருந்து நிறுத்தும் இடங்களில் உயர்கோபுரங்கள் வழியாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருவிழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருத்தேர் செய்திட ரூ.16 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்து தேர் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இறையன்பர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஏதுவாக ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அன்னதானக்கூடமும் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள உலோக சிற்பங்கள் மற்றும் சாமி உற்சவ சிலைகளை பாதுகாத்திட வேண்டி உலோக சிலைகள் பாதுகாப்பு மையம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்கு வருகை தருகின்ற இறையன்பர்கள் மா விளக்கு எடுப்பதற்கு வசதியாக நீண்ட விசாலமான மண்டபம் அமைத்திட ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மா விளக்கு மண்டம் கட்டப்பட்டுள்ளது. கோயில் நிர்வாக வசதிக்காக ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கோயில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டி தரப்பட்டுள்ளது.
இந்நிகழ்;வின் போது, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் அலுவலர் பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து