பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இந்து தொழிலதிபர், மகன் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 14 மே 2018      உலகம்
shot dead 2018 5 14

பலுசிஸ்தான் : பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் அவரது மகனும் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தான் மக்கள் தொகையில் இந்துக்கள் 2 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். அவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணம், கதானி பகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜே பால் தாஸ், அவரது மகன் கிரிஷ் நாத் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்களை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த இரட்டை கொலை பாகிஸ்தானில் வாழும் இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


உள்ளூர் போலீஸார் கூறியபோது, “கொள்ளை முயற்சியின்போது தந்தையும் மகனும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்.இந்துக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

மனித உரிமை அமைப்புகள் கூறியபோது, “தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தி அப்பாவிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்று வருகின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து