மும்பை தாக்குதல் விசாரணை தாமதத்துக்கு இந்தியாவே காரணம் - பாக். முன்னாள்அமைச்சர் அபாண்ட பழி

திங்கட்கிழமை, 14 மே 2018      உலகம்
Nisar Ali Khan 2018 5 14

இஸ்லாமாபாத் : மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை நிறைவடையாமல் தாமதமாவதற்கு இந்தியாதான் காரணம் என்று அந்நாட்டு முன்னாள் உள்துறை அமைச்சர் நிஸார் அலி கான் தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பாக எந்தவித ஆதாரங்களையும் இந்திய அரசு அளிக்க மறுத்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் அந்நாட்டுக்குத் தொடர்பு இருப்பதாக சூசகமாகத் தெரிவித்தார்.  மேலும், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதாகவும் கூறினார். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

இந்நிலையில், இதுதொடர்பாக இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் நிஸார் அலி கூறியதாவது:


மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடையாமல் நிலுவையில் உள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க பாகிஸ்தானே காரணம் என சித்திரிக்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல. வழக்கு தொடர்பாக எந்த ஒத்துழைப்பையும் அளிக்காமல் பிடிவாதமாக இந்தியா இருந்து வருவதே அதற்கு காரணம்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் 90 சதவீத ஆதாரங்கள் அனைத்தும் இந்தியா வசமே உள்ளன. ஆனால், அவற்றை பாகிஸ்தானிடம் இந்தியா இதுவரை அளிக்கவில்லை என்றார் அவர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

ரம்ஜான் பிரியாணி | Ramzan Special Chicken Biryani in Tamil | Iftaar Special Biryani Recipe

இந்த வார ராசிபலன் - 10.06.2018 முதல் 16.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 10.06.2018 to 16.06.2018

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து