லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் - மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

திங்கட்கிழமை, 14 மே 2018      இந்தியா
Lal Bahadur Shastri 2018 5 14

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

சாஸ்திரியின் உடல் தகனம் செய்வதற்காக இந்தியா கொண்டுவரப்பட்டதா அல்லது வெளிநாட்டு மண்ணிலேயே (சோவியத் ரஷ்யா) எரிக்கப்பட்டதா எனக் கோரி ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் சாஸ்திரியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, “லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராஜ் நாராயண் குழுவின் ஆவணங்கள் காணவில்லை என கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்களை பிரதமர் அலுவலகம், உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் வெளியிட வேண்டும்.

நாட்டின் முக்கிய தலைவர் மரணம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. அதைத் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சாஸ்திரிக்கு என்ன நடந்தது என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது பிரதமர் அலுவலகத்தின் அடிப்படை பொறுப்பு ஆகும்” என்றார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே 1965-ல் போர் நடைபெற்றது. அதன் பிறகு 1966 ஜனவரி 11-ம் தேதி அப்போதைய சோவியத் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது ஆயுப் கானும் பங்கேற்றனர். அப்போது தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த சில மணி நேரத்தில் லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

எனினும், பனிப்போர் உச்சத்தில் இருந்த சூழ்நிலையில் சாஸ்திரி மரணத்தில் சதி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த 1977-ம் ஆண்டு அப்போதைய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, ராஜ் நாராயண் குழுவை அமைத்தது. அக்குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் விவரத்தை அரசு வெளியிடவில்லை.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ், குழு அறிக்கையை வெளியிடக் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்த போதும், ரகசியம் எனக் கூறி அதை வெளியிட அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், 2011-ல் இதுதொடர்பான ஒரு மனுவை விசாரித்த சிஐசி, சாஸ்திரி மரணம் தொடர்பான 11 ஆவணங்களை வெளியிடுமாறும் வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ள ஒரு ஆவணத்தை வெளியிடத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து