முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஸ்கோடியில் இந்திய கடலோர பாதுகாப்பு குறித்து இந்திய கடற்படை வீரர்கள் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

திங்கட்கிழமை, 14 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்- இந்தியக் கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்திய கடற்படை வீரர்கள் தனுஸ்கோடியில் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு  அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 இந்திய கடலோரப்பகுதியில் அந்நிய நாட்டு தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படையின் சார்பில் கடலோர பகுதிகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 25 நாட்கள்  மோட்டார் சைக்கிளில்  கடற்படை வீரர்கள் தொடர்ந்து கடலோரப்பகுதிகளுக்கு  சாகசப் பயணம் செல்ல  ஏற்பாடு நடைபெற்று வந்தது.அதன் பேரில் நாட்டின் மேற்குப் பகுதியான குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருந்து கிழக்குப் பகுதியான கொல்கத்தா இடையிலான கடலோரப் பகுதிகள் வழியாக இந்திய கடற்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள் சாகசப் பயணத்தை மேற்கொண்டனர்.இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்ட இந்தியக் கடற்படை அதிகாரிகள் அடங்கிய குழுவினர்  ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்கள் மூலமாக ராமநாதபுரம் அருகே உள்ள இந்தியக் கடற்படை விமான தளமான ஐ.என்.எஸ். பருந்துவுக்கு சனிக்கிழமை வந்தனர். அங்கு கடற்படை அதிகாரிகள்  அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர்   ஐ.என்.எஸ். பருந்து கமாண்டர் குல்தீப் ஹெச் டாங்சல் அங்கிருந்து இந்தப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை காலையில்  கொடியசைத்து துவக்கி வைத்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய இந்திய கடற்படை வீரர்கள் பாம்பன் சாலைப் பாலம் வழியாக தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.அங்கு கடற்படை வீரர்கள் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில்  பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய  பேனர்கள் கட்டி கடற்படை சேவைகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து