முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு 9-வது முறையாக தகுதிபெற்று சி.எஸ்.கே.அணி சாதனை

திங்கட்கிழமை, 14 மே 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு ஒன்பதாவது முறையாக தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது.

16 புள்ளிகள்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இதில் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்தாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு ஐதராபாத் அணி முதலாவதாக தகுதிபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் 16 புள்ளிகள் பெற்ற சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

ஒரே அணி சி.எஸ்.கே

இந்த சீசனின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றதன் மூலம் சென்னை அணி ஒன்பதாவது முறையாக ஐ.பி.எல். தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது. சென்னை அணி கடந்த இரண்டு ஆண்டுகள் தடையினால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடவில்லை. இந்த முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் விளையாடிய அனைத்து சீசனிலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது.

2 முறை சாம்பியன்

சென்னை அணி முன்னதாக விளையாடிய 8 சீசனில், 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு, 4 முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை அணியை தவிர மும்பை இந்தியன்ஸ் அணி 11 சீசனில் 7 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து