ஐ.பி.எல். கிரிக்கெட் : பிளே ஆப் சுற்றுக்கு 5 அணிகள் கடும் போட்டி

திங்கட்கிழமை, 14 மே 2018      விளையாட்டு
chennai IPL 2018 4 12

சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத், சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த சுற்றுக்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூர் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மற்ற 2 அணிகள்...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. ‘லீக்‘ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். மொத்தம் 56 ‘லீக்‘ ஆட்டமாகும். இதுவரை 48 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 9 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே இதுவரை ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. டெல்லி அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையும் மற்ற 2 அணிகள் எவை என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

3-வது இடத்தில்...

கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட்டைரர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. இதில் மும்பை, பெங்களூர் அணிகள் எஞ்சிய ஆட்டங்களில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது. இதனால் அந்த அணிகளுக்கு கடுமையான சவால் இருக்கிறது. பஞ்சாப் அணி 16 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டம் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணி வாய்ப்பை அதிகரித்து கொள்ளும். தோற்றால் கொல்கத்தா, ராஜஸ்தானுடன் இணைந்து விடும் இந்த இரண்டு அணிகளும் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று உள்ளன. இந்த இரண்டு அணிக்கும் 2 ஆட்டம் இருக்கிறது.

கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதும் இன்றைய ஆட்டமும், மும்பை- பஞ்சாப் அணிகள் 16-ந்தேதி மோதும் ஆட்டமும் ‘பிளே ஆப்’ வாய்ப்பை முடிவு செய்து விடலாம்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து