முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடி தொடர்பான வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.13, 492 கோடி நிதி மோசடி செய்த விவகாரம் தொடர்பான வழக்கில், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது,

மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலாகாபாத் வங்கியின் தலைமைச் செயலதிகாரியாக தற்போது இருப்பவருமான உஷா அனந்த சுப்பிரமணியன், நீரவ் மோடியின் சகோதரர் நிஷால் மோடி, நீரவ் மோடி நிறுவன அதிகாரி துபாஷ் பரப் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் கே.வி. பரம்ஜி ராவ், சஞ்சீவ் சரண், பொது மேலாளர் நேஹால் அஹத் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இருக்கின்றன. குற்றப்பத்திரிகையில் நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி, சுபாஷ் பரப் ஆகியோருக்கு நிதி மோசடியில் இருக்கும் தொடர்புகள் குறித்து சி.பி.ஐ. விரிவாக குறிப்பிட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில், நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸிக்கு, நிதி மோசடியில் இருக்கும் தொடர்பு குறித்து சி.பி.ஐ. குறிப்பிடவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து