5648 வாக்குகள் மட்டுமே பெற்று கர்நாடக சட்டசபை தேர்தலில் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
vatal nagaraj 2018 5 15

பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். இதற்காக அவர் அந்த தொகுதியில் தமிழில் பேசி வாக்கு சேகரித்தார்.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் அவர் வெறும் 5648 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். காவிரி விவகாரத்தில் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழகத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் வாட்டாள் நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து