நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி விட்ட மத்திய அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
nirmala sitharman-federal minister 2018 5 15

புது டெல்லி : கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்ததையடுத்து டெல்லி தலைமையகத்தில் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. காங்கிரசை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியை பெங்களூர் பா.ஜ.க. தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதே போல் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கொண்டாடினர். அப்போது ரவிசங்கர் பிரசாத், நிர்மலா் சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டி விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து