பா.ஜ.க.வின் வெற்றிக்கு கை கொடுத்த ஸ்ரீராமுலு

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
sriramulu 2018 5 15

பெங்களூர் : கர்நாடகாவில் பா.ஜ.க. அதிகம் வெற்றி பெற அந்த மாநிலத்தில் இருக்கும் தலித் வாக்காளர்கள் பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள். இதற்கு பா.ஜ.க. கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஸ்ரீராமுலுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. கர்நாடகாவில் பா.ஜ.க. .வெற்றி பெற அந்த மாநிலத்தில் இருக்கும் தலித் வாக்காளர்கள் பெரிதும் உதவி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.க.வின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஸ்ரீராமுலுதான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

தலித் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் எல்லாம் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இது முழுக்க முழுக்க ஸ்ரீராமுலு மூலம்தான் சாத்தியமானதாக கூறப்படுகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த அவர் செய்த பிரச்சாரம்தான் இந்த ஆதரவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீராமுலு போட்டியிட்ட இரண்டு தொகுதியில் பதாமி தொகுதியில் சித்தராமையாவிற்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளார். ஆனால் முலக்குமூறு தொகுதியில் அவர் அபார வெற்றி பெற்றுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து