அதிபர் டிரம்பின் மனைவிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      உலகம்
trump wife kidney surgery 2018 5 15

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மெலானியா டிரம்பின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் மேரிலான்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்து ஒருவாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலானியாவை நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் பார்வையிட்டதாகவும், சிகிச்சை குறித்து அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வயதான மெலானியா டிரம்ப் சுலேனேவியா நாட்டைச் சேர்ந்தவர். மெலானியா- டிரம்புக்கு பரோன் என்ற 12 வயது மகன் உள்ளார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து