வடகொரியாவின் அணு சோதனையால் 11 அடி தூரம் நகர்ந்த மேன்டேப் மலை

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      உலகம்
Mentap mountain 2018 5 15

பியாங்யாங் : வடகொரியா மேற்கொண்ட அணுஆயுத சோதனையின் விளைவால், அங்குள்ள மலை ஒன்று 11 அடி தூரம் நகர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணுஆயுத சோதனைக்குப் பேர் போனது வடகொரியா. அந்நாட்டின் 'மேன்டேப்’ மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு ஒரு அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் 2-வது முறையாக 4.1 ரிக்டரில் நில அதிர்வு உருவானது. அது ஜப்பானின் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆய்வில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது. அதாவது, அணு ஆயுத சோதனையின் காரணமாக அங்குள்ள 'மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் அந்த மலையானது சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்தது.

தொடர் அணுஆயுத சோதனைகளால் 'மேன்டேப்’ மலைப் பகுதியின் சோதனைக் கூடம், செயல்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-யங் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அதை மூட இருப்பதாக நாடகமாடுகிறார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும், விரைவில் அவர் வேறு இடத்தை அணு ஆயுத சோதனை நடத்த தேர்ந்தெடுக்கலாம் என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது.

Kolamavu Kokila(CoCo) Movie Review | Nayanthara | Yohi babu | Anirudh | Nelson

World's ugliest pug!! See for yourself!

கட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்

கண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்

அழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

வீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து