முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் சில நாள்களில் ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : மேற்கத்திய நாடுகளுடன் பேசி, புதிய ஈரான் அணுசக்தி ஒப்பந்ததை இன்னும் சில நாள்களில் உருவாக்க முடியும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ கூறியதாவது,

ஈரானுடனான அணு சக்தி திட்டம் என்பது அமெரிக்காவுக்கு உண்மையிலேயே பாதுகாப்பு அளிப்பதாக இருக்க வேண்டும்; அதனை எட்டுவதற்காக, மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் அதிபர் டொனால்ட் டிரம்ப் எனக்குக் கட்டளையிட்டுள்ளார். அந்த இலக்கை எட்டுவதற்காக, ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்ந்து பல நாள்களுக்கு தீவிர பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

இன்னும் சில நாள்கள், அல்லது வாரங்களில் உண்மையிலேயே பலன் தரக் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டு, இருதரப்பினருக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் இந்த வாரம் அறிவித்தார். இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து