முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயல்கிறது - எடியூரப்பா கடும் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : மக்கள் தீர்ப்புக்கு எதிராக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயலுவதாக பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கடந்த 12- ம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவகவுடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவகவுடாவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயலுவதாக பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். காங்கிரஸ் அரசுக்கு எதிரான மனநிலையே அதன் தோல்விக்கு காரணம். இதன் மூலம் மக்கள் எங்களுக்கு முழு ஆதரவை அளித்துள்ளனர். பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன

காங்கிரஸ் முதல்வரான சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வியடைந்துள்ளார். ஆனால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயலுகிறது. இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பாரதிய ஜனதாவைத்தான் கவர்னர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து