மோசடி வழக்கு: பி.என்.பி. மீது குற்றப்பத்திரிகை

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      வர்த்தகம்
Punjab-National-Bank 2018 02 14

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.13,500 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மோசடி விவகாரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உஷா அனந்தசுப்ரமணியனின் பங்கு பற்றிய விவரங்கள் இந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

உஷா அனந்தசுப்ரமணியன் தற்பொழுது அலகாபாத் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றப் பத்திரிகையில் மேலும் பல உயர் அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து