முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      தேனி
Image Unavailable

தேனி,  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட்-1, ஆண்டிபட்டி பிட்-2 ஆகிய வருவாய் கிராமங்களுக்கான 1427-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில்   மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,   நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்திலுள்ள தேனி, போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான 1427-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஆண்டிபட்டி வட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களாலும், போடிநாயக்கனூர் வட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களாலும், தேனி வட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அவர்களாலும், உத்தமபாளையம் வட்டத்திற்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களாலும், பெரியகுளம் வட்டத்திற்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களாலும் 15.05.2018 இன்று முதல் 23.05.2018 அன்று வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) முதல் நாளான இன்று ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட்-1, ஆண்டிபட்டி பிட்-2 ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 112 கோரிக்கை மனுக்களும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 71 கோரிக்கை மனுக்களும், தேனி வட்டத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 107 கோரிக்கை மனுக்களும், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பூலாநந்தபுரம், சின்னமனூர், கருங்கட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 64 கோரிக்கை மனுக்களும், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி பிட்-1, கெங்குவார்பட்டி பிட்-2, தேவதானப்பட்டி பிட்-1, தேவதானப்பட்டி பிட்-2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 96 கோரிக்கை மனுக்களும், என மொத்தம் பொது மக்களிடமிருந்து 450 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து; பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ் குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் சம்பந்தம் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-யில் பொதுமக்களால் அளிக்கப்படுகின்ற மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒரு வாரத்திற்குள் தகுதி வாய்ந்த மனுக்களுக்குரிய பயன்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ், தெரிவித்தார்.
 இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) செல்வி கவிதா  உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்)  கருப்பையா  ஆண்டிபட்டி வட்டாட்சியர்கள்  .செந்தில்  ,  இளங்கோ  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து