முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மாகுமாரிகள் இயக்கம் நடத்தி வரும் அகில இந்திய நடமாடும் கண்காட்சி பஸ்மதுரையில் பொதுமக்கள் வரவேற்றனர்

புதன்கிழமை, 16 மே 2018      மதுரை
Image Unavailable

 மதுரை-பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் அகில இந்திய நடமாடும் கண்காட்சி பஸ் மதுரை வந்தது. மதுரையில் பொதுமக்கள் பார்வையிட்டு வரவேற்றனர்.
 தூய்மை, ஆக்கபூர்வமான சிந்தனைகள், தியானம் போன்ற நலன்பயக்கும் விஷயங்களை மக்கள் இடத்தில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் ஆக்கபூர்வ முன்னுதாரன இளைஞர்களை முன்னிறுத்தி நாடுதழுவிய நடமாடும் பஸ் பேரணி கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
எனது பாரதம் பொன்னான பாரதம் என்ற கொள்கையை தாங்கி இளைஞர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இந்த பஸ் கண்காட்சி பேரணி கடந்த 2017 முதல் வரும் 2020 ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். குஜராத்தில் துவங்கிய இந்த பஸ் பேரணி மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளத்தை அடுத்து தமிழகம் வந்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டம் வழியாக மதுரை மாவட்டத்திற்கு நத்தம் வழியாக வந்தடைந்தது.
 இந்த பஸ் கண்காட்சி பேரணியை நாராயணபுரம் பேங்க் காலனி பஸ் நிலையத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த கண்காட்சி பஸ் பேரணியை பொறுப்பாளர் பிரம்மாகுமாரி உஷா, தலைமையகம் அபுமலையைச்சார்ந்த ஜெயக்குமார், பிரம்மாகுமாரி மீனாட்சி, தடையவியல் அலுவலகத்தின் இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த நடமாடும் பஸ் பேரணி மதுரையில் 3 - நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வரும்.
முதல் நாள் மதுரை செல்லூர், கே.கே.நகர், புதூர், தமுக்கம் ஆகிய இடங்களுக்கு சென்றது. இந்த கண்காட்சி பஸ்ஸை பொதுமக்கள் வரவேற்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று  2 - வது நாளாக ஆனையூர், கூடல்நகர், குருதியேட்டர், ஆர்.வி.நகர், விராட்டிபத்து, நாகமலை புதுக்கோட்டை, துவரிமான் ஆகிய இடங்களுக்கு சென்றது. இன்று ரேஸ்கோர்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, அண்ணாநகர், அண்ணா பஸ்நிலையம், அரவிந்த் கண் மருத்துவமனை, தெற்கு வாசல், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்கு சென்று பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்படுகிறது. இந்த பஸ்கண்காட்சியை பொதுமக்கள் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து