பதவியேற்க வருமாறு எடியூரப்பாவுக்கு கர்நாடக கவர்னர் வாஜூபாய் அழைப்பு இன்று காலை பதவியேற்கிறார்

புதன்கிழமை, 16 மே 2018      இந்தியா
Yeddyurappa 2017 2 14

பெங்களூர்: கர்நாடக முதல்வராக பதவியேற்க வருமாறு எடியூரப்பாவுக்கு அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கர்நாடக புதிய முதல்வராக எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார்.

உரிமை கோரினர்
கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களையும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களையும் கைப்பற்றின. பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி அமைந்துள்ளது. இதையடுத்து அம்மாநில கவர்னரை மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி உரிமை கோரினார். இதே போல அவருக்கு முன்பு எடியூரப்பா கவர்னரை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி உரிமை கோரினார்.

புதிய முதல்வராக...
ஆனால் நேற்று முன்தினம் இரவு வரை கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவராக எடியூரப்பாவும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் சட்டமன்ற தலைவராக குமாரசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களில் யாரை கவர்னர் அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் நேற்று இரவு எடியூரப்பாவுக்கு மாநில கவர்னர் அழைப்பு விடுத்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு புதிய முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொள்கிறார்.

இதற்கிடையே எடீயூரப்பாவை பதவியேற்க கர்நாடக கவர்னர் அழைத்தாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

பணிக்கு திரும்ப...
இதனிடையே கவர்னரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனைத்து காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று பெங்களூர் மாநகர காவல் ஆணையர் தனது சுற்றறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகத்தில் இன்று பா.ஜ.க. ஆட்சி அமைகிறது. அதே நேரத்தில் அங்கு போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பதட்டம் நிலவுகிறது.

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து