முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோடி மோடி சேர்ந்தாலும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை மோடியால் ஏற்படுத்திட முடியாது: திருமங்கலத்தில் திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி:

வியாழக்கிழமை, 17 மே 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-ஒரு கோடி மோடி சேர்ந்தாலும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை மோடியால் ஏற்படுத்திட முடியாது என்று மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டியளித்தார்.
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஊழியர்கள் கூட்டம் திருமங்கலம் நகர் உசிலம்பட்டி சாலையிலுள்ள வி.எஸ்.ஆர் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் தலைமை வகித்தார்.மாநகர் மாவட்ட தலைவர் காhத்திகேயன் முன்னிலை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் வரவேற்று பேசினார். ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஊழியர் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஓ.ஆர்.இளங்கோவன்ராம் மற்றும் நிர்வாகிகள் ஆளுயர மாலையணிவித்து மலர்கிரீடம் சூட்டி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழகத்தில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 35லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.இதனை 50லட்சமாக உயர்த்திட உறுப்பினர்களை அதிகமாக சேர்த்திட வேண்டும்.நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது வரவேற்கத் தக்கது.அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தலில் அவர்களது கட்சி வெற்றி பெறாவிட்டால் கட்சி காலியாகிவிடும்.அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது.பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தக்கூடிய சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. அடுத்த பிரதமராக வரக்கூடிய ஆற்றல் மிக்க தலைவர் ராகுல்காந்தி மட்டும் தான்.விரைவில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு ராகுல்காந்தி பிரதமராவது நிச்சயம்.கர்நாடக மாநில ஆளுநர் அரசியல் சட்டத்திற்கும், சட்டமன்ற விதிமுறைகளுக்கும் மாறாக மத்திய அரசின் ஏஜென்டாக செயல்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுதும் இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 104 இடங்களை மட்டுமே பிஜேபி பெற்றுள்ளது.காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்திடம் 118 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.இருப்பினும் அறுதி பெரும்பாண்மை இல்லாத பிஜேபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.குதிரை பேரத்திற்கும் ஊழலுக்கும் வழிவகுத்திடும் வகையில் மோடியின் பேச்சை கேட்டு ஆளுநர் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்பட்டு எடியூரப்பாவை முதலமைச்சராக்கியிருப்பது சட்ட விரோதம்.இந்த ஆட்சி நிலைக்காது. மீண்டும் கர்நாடகத்தில் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது.தேசத்தில் எல்லாம் ஒன்றாக இருக்கவேண்டும் அதிலும் ஒரே கட்சியாக பிஜேபி மட்டும் இருக்கவேண்டும்,காங்கிரசை அழிப்பேன்,காங்கிரஸ் இல்லாத தேசத்தை உருவாக்குவேன் என்று மோடி சொல்லுவது பகல் கனவு.ஒரு மோடியல்ல ஒருகோடி மோடி சேர்ந்தாலும் காங்கிரசை இல்லாத இந்தியாவை மோடியால் ஏற்படுத்திட முடியாது என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஆர்.ஜெயராம் தலைமையில் நகரத் தலைவர்கள் தாமோதரன்,கருப்பணன்,கபீர்அகமது, சசிவர்ணதேவன், கணேசன்,வட்டார தலைவர்கள் இளங்கோவன்,முருகேசன்,சுப்பிரமணியன்,சேகர்,கிங்பாபு, பூணூல்,முத்துவேல்,காசிநாதன்,வெஸ்டன்முருகன்,ரெங்கமலை,புதுராஜா,ஜெயராமன்,நன்மாறன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிருதிவிராஜ்,ராஜ்குமார்,சுப்பிரமணியன், ரமேஷ்பாபு,பிரேம்சந்தர்,பொன்மணிகண்டன்,காமாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட கமிட்டி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர்கள்,மாவட்டச் செயலாளர்கள்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்,மகிளா காங்கிரஸ்,சேவாதள நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள்,கிராம கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ---

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து