முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டப்பணிகள் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆலோசணை

வியாழக்கிழமை, 17 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில், வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டப்பணிகளின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளின்  காரணிகளை குறித்து களஆய்வு செய்வது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்;தில்  வளர்ச்சிப் பணிகள் குறித்த காரணிகளை களஆய்வு செய்வதற்காக வருகை தந்துள்ள டாட்டா டிரஸ்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களைச் சார்ந்த பல்வேறு நிலை அலுவலர்கள் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
 இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 115 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டம் ஒன்றாகும்.  அதனடிப்படையில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு பொதுமக்கள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளை முழுமையாக சென்றடைந்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 குறிப்பாக பொது சுகாதார முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன மேம்பாடு, அடிப்படை உட்கட்;டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்திறன் பயிற்சி வழங்கி தனிநபர் வருமானத்தை உயர்த்துதல் என்பதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இவ்வளர்ச்சிப் பணிகளினால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற காரணிகள் குறித்தும் கள ஆய்வு செய்து ஒப்புகை செய்வதற்காக டாடா டிரஸ்டினைச் சார்ந்;த பல்வேறு நிலை அலுவலர்கள் வருகை தந்துள்ளனர்.  இவ்வலுவலர்கள் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜனை மாவட்ட கலெக்டர் நேரடியாக சந்தித்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்தார்கள்.
 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, இணை இயக்கநர்கள் (மருத்துவப்பணிகள்) மரு.சகாய ஸ்டீபன்ராஜ், (வேளாண்மை) பி.இந்திராகாந்தி, (கால்நடைப் பராமரிப்புத் துறை) மரு.தி.மோகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) ராஜா, (வளர்ச்சி) உமாமகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.சதீஸ்குமார் உள்பட டாடா டிரஸ்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களைச் சார்ந்த பல்வேறு நிலை அலுவலர்கள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து