காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி

Kalaiyarkovil jamabanthi  17 5 18

 சிவகங்கை, - சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் க.லதா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றைய தினத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் கிராமங்களான செம்பனூர், மல்லல், பூவாளி, எம்.வேலாங்குளம், பெரியகண்ணனூர், ஆள்பட்டவிடுதி, அதப்படக்கி, நாடாமங்கலம், பி.உடையாரேந்தல், புளியங்குளம், கீழப்பிடாவூர், கொந்தகை, தடியமங்கலம் ஆகியப் பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம்; மனுக்களை பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் மனுக்கள் மீது விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்; தெரிவிக்கையில்,
         காளையார்கோவில் வட்டத்தில் 09.05.2018 அன்று ஜமாபந்தி துவங்கி இன்று நிறைவடைந்துள்ளது. மேற்கண்ட நாட்களில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 62 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 163 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 147 மனுக்கள் வருவாய்த்துறை தொடர்பாகவும், 16 மனுக்கள் பிற துறைகள் தொடர்பான மனுக்களும் வரப்பெற்றுள்ளது. மேற்கண்ட மனுக்கள் தொடர்பாக அலுவலர்கள் சிறப்புக் கவனம் எடுத்து கள ஆய்வு மேற்கொண்டு ஒருவாரத்திற்குள் அனைத்து மனுதாரர்களுக்கும் தீர்வு வழங்கிட வேண்டுமென தெரிவித்ததுடன் பட்டா பெயர் மாற்றம் மற்றும் பட்டா பாகப் பிரிவினை தொடர்பான மனுதாரர்களுக்கு காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் முதியோர் உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்துள்ள மனுதாரர்களின் வயது முதிர்வை கருத்தில் கொண்டு அன்றைய தினங்களே ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து உரிய தீர்வை வழங்கும்பொழுது பயன்பெறும் பயனாளிகளுக்கு மனநிறைவு ஏற்படும். அதேபோல் தகுதி இல்லாதவர்கள் என கண்டறியப்பட்டால் அந்த மனுதாரர்களிடம் அரசின் விதிமுறை குறித்து எடுத்துக் கூற வேண்டும். அப்பொழுதுதான் தேவையற்ற நபர்களின் எண்ணிக்கை குறையும். இதுபோல் அன்றாட நிகழ்வுகளில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களின் தன்மையைக் கண்டறிந்து அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்து தீர்வு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, தெரிவித்தார்.
        பின்னர் ஐந்து பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கியதுடன் தோட்டக்கலைத்துறையின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.        இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நிலஅளவை) யோகராஜா, காளையார்கோவில் வட்டாட்சியர் சந்தானலெட்சுமி, அலுவலக மேலாளர் யாஸ்மின், துணை வட்டாட்சியர்  கிருஷ்ணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து