தங்கம் விலை நிலவரம்

வியாழக்கிழமை, 17 மே 2018      வர்த்தகம்
gold 2017 10 05

கடந்த 10-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 912 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்றத்தால் பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. திங்கட்கிழமை ஒரு பவுன் ரூ24 ஆயிரத்து 64 ஆக இருந்தது. செவ்வாய் கிழமை ரூ.64 குறைந்து பவுன் ரூ.24 ஆயிரமாக இருந்தது.

புதன் கிழமையன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரு.232 குறைந்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 768 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.29 குறைந் துள்ளது. ஒரு கிராம் ரூ.2,971-க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரமாக உளளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து