முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் வயதான அணியா? தோனியை புகழ்ந்து தள்ளிய ரெய்னா

வியாழக்கிழமை, 17 மே 2018      விளையாட்டு
Image Unavailable

அரியானா குருகிராமில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சிகளுக்கு இடையில் சி.எஸ்.கே. அணி பற்றி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

எங்கள் அணியை வயதான அணி என்று கூறுகின்றனர். ஆனால் அனுபவம் தேவை. அனைத்துப் பெருமைகளும் தோனியையே சாரும், பாருங்கள் அவர் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார் என்று. 35-36 வயதிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை அவர் இந்த ஐ.பி.எல்-ல் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

கிரிக்கெட்டில் யாரும் ரன்னர்-அப் ஆக ஆட மாட்டார்கள், ஏனெனில் அனைவரது கவனமும் வெற்றி பெறும் அணி மீதுதான். இந்தமுறை கோப்பையை வென்றால் முந்தைய ஐ.பி.எல் போட்டிகளில் இறுதிகளில் தோற்ற கசப்பான நினைவுகள் மறையும்.

தோனியும் விராட் கோலியும் இருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் உத்வேகத்தையே மாற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் டி20, ஒருநாள் தொடரை வென்றோம், ஒரு டெஸ்ட் போட்டியையும் வென்றோம். விராட் கோலிக்கு தோல்வி பிடிக்காது. கோலியின் தலைமையில் நடப்பு இந்திய கிரிக்கெட் பயமற்ற ஒரு அணுகுமுறையுடன் ஆடி வருகிறது. இங்கிலாந்தில் உலகக்கோப்பையை வெல்ல அணி அதற்கு முன்பாக வெற்றிகளுடன் உத்வேகம் பெறுவது அவசியம் என்று ரெய்னா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து