முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய கல்விக் கண்காட்சி மதுரையில் 21 ம் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 17 மே 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : மதுரையில் உள்ள ராயல் கோர்ட் ஹோட்டலில் வரும் 21 - ம் தேதி ரஷ்ய கல்விக்கண்காட்சி நடக்கிறது.

இது குறித்து ரஷ்ய வோல்கோ கிரேடு ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஸ்மித் மேக்சிம், ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ராயல் கோர்ட் ஹோட்டலில் வரும் 21 - ம்தேதி ரஷ்ய கல்வி கண்காட்சி நடக்கிறது. இதில் மருத்துவம், பொறியியல் கல்வியை கற்பிக்கும் 10 க்கும் மேற்பட்ட ரஷ்ய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கல்வி கண்காட்சி நடைபெறும். இளநிலை, முதுகலை பட்டபடிப்புகளில் சேர விரும்புவோர் தகுதியான சான்றிதழ்களுடன் வந்தால் அந்த மாணவர்களுக்கு உடனடியாக சேர்க்கை வழங்கப்படும்.

இந்த கண்காட்சியை ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராட் ஆகியவை இணைந்து நடத்துகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வு எழுதி தேறியிருத்தல் வேண்டும். ஆனால் 2018 - ம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவ படிப்பில் சேர்ந்து தற்போது அதற்கான முன்தயாரிப்பு படிப்புகளில் உள்ளவர்களுக்கு இந்தாண்டு மருத்துவ கவுன்சில் விதிவிலக்கு அளித்துள்ளது.

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இது பற்றிய கூடுதல் விபரங்களை 92822 - 21221 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து