முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் இனப்படுகொலை நினைவு நாள் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      இலங்கை
Image Unavailable

கிளிநொச்சி: தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நேற்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதை நினைவுகூறும் வகையில் மே 18-ந் தேதி தமிழ் இனப்படுகொலை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 12-ந் தேதி முதல் தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இலங்கை மற்றும் உலகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் இனப்படுகொலை வாரம் கடைபிடிக்கப்பட்டது.

நேற்று முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடினர். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபை மேற்கொண்டிருந்தது. மதச்சடங்குகள், ஈகைச் சுடர்கள் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட உறவினர்களுக்கு தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக முள்ளிவாய்க்கால் சென்றடைந்தனர். நந்திக்கடலில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலும் உணர்வுப்பூர்வமாக இனப்படுகொலை நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் உயிர்நீர்த்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து