முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மத்திய அரசு அதிகாரி ஆய்வு

வெள்ளிக்கிழமை, 18 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  தலைமையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சக செயலர்   ஸ்ரீ துர்கா சங்கர் மிஸ்ரா  ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்தும், அம்ரூட் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற வீடற்ற  ஏழைகள் தங்கும் இல்லங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து துரைச்சாமி நகர் பகுதியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவினை சிறந்த முறையில் பராமரித்து வரும் குடியிருப்போர் நலச்சங்கத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் தானப்பமுதலி தெருவில் உள்ள நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்தில் ஆய்வு செய்து அங்கு தங்கியுள்ள முதியோர்களின் குடும்பங்கள் குறித்தும், தங்கும் இல்லத்தின் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தங்கும் இல்லத்தில் முதியோர்களால் பராமரிக்கப்படும் மாடித் தோட்டத்தினை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   நகரப்பொறியாளர்  .மதுரம், உதவி ஆணையாளர்கள்  .அரசு, பழனிச்சாமி, செயற்பொறியாளர்  .சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், சுகாதார ஆய்வாளர்  கோபால்,  சுப்புராஜ்,  .வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து