முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஷால் படத்தில் வில்லன்னாக நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது : நடிகர் அர்ஜுன்

திங்கட்கிழமை, 21 மே 2018      சினிமா
Image Unavailable

Source: provided

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா  நடைபெற்றது.

விழாவில் நடிகர் அர்ஜுன் பேசியது :  இரும்புத்திரையை பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கும். என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கும் நன்றி. நானும் விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர் தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்து என்னிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார்.

விஷால் என்னிடம் இயக்கம் தான் கற்க வந்தார். ஆனால் ஒருமுறை வேறு ஒரு நடிகருக்கு பதிலாக விஷாலை ஒரு காட்சியில் நடிக்க சொன்னேன். விஷாலும் ட்ரைளுக்காக அதில் நடித்தார். அதை பார்த்ததும் விஷாலை நடிகராக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது அதை நான் விஷாலுடைய தந்தையை சந்திக்கும் போது கூறினேன்.

அவரும் விஷாலை வைத்து செல்லமே படத்தை தயாரித்தார். படம் வெற்றி பெற்றது. நான் சொன்னது போலவே விஷால் இன்று வெற்றிகரமான ஹீரோவாக , தயாரிப்பாளராக , நடிகர் சங்க பொது செயலாளராக மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். சந்தோஷமாக உள்ளது.

இன்று அவருடைய படத்தில் அவருக்கு வில்லன்னாக நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஷங்கர் புதுமுக இயக்குநர் தான். அதே போல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார் என்றார் அர்ஜுன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து