முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயல் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 21 மே 2018      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர்-ராஜன் தேஜஸ்வர், நடிகை-தாருஷி, இயக்குனர்-ரவி அப்புலு, இசை-சித்தார்த்த விபின், ஓளிப்பதிவு-வி.எளையராஜா,

அப்பாவை இழந்த நாயகன் ராஜன் தேஜஸ்வர், அம்மா ரேணுகா சவுகானுடன் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். இந்திய விண்வெளி மையமான நாசாவில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவுடன் வலம் வருகிறார் நாயகன் ராஜன். எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் ராஜனின் அம்மா, கட்டணம் செலுத்தவில்லை என்று பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்காக போராடுகிறார்.

பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த நிலையில் பள்ளிப் படிப்பை முடிக்கும் ராஜன், தனது அம்மாவை சிறையில் இருந்து ஜாமீனில் எடுப்பதற்காக படித்துக் கொண்டே வேலைக்கும் செல்கிறார். மேலும் தனது கனவை நோக்கி ஓட முடியாமல், இன்ஜினியரிங் படித்துவிட்டு கேரளாவில் கார் கம்பெனி ஒன்றிலும் வேலைக்கு சேர்கிறார். இதற்கிடையே சென்னையில், ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அவரது பகுதியில் பிரபல ரவுடியை ராஜன் அடித்து துவம்சம் செய்கிறார்.

அந்த சண்டைக்கு பிறகு அவந்த ரவுடியின் மவுசு குறைகிறது. அந்த பகுதியில் இருக்கும் அனைவரும் அந்த ரவுடியை மதிக்கவில்லை, மேலும் கிண்டலும் செய்கின்றனர். இதையடுத்து தன்னை அடித்த ராஜனை, அதே மார்க்கெட்டில் வைத்து திருப்பி அடிக்க வேண்டும் என்று அந்த ரவுடி முடிவு செய்கிறார்.இந்த நிலையில், அந்த ரவுடியின் மனைவியும் அவரை விட்டு பிரிகிறார். கேரளா சென்ற நாயகனை சென்னைக்கு கூட்டிவர முன்னாள் ரவுடிகளான ஆடுகளம் ராமதாஸ் கேரளா செல்கிறார்.

கேரளாவில் தனது பள்ளித்தோழியான நாயகி தாருஷியிடம் தனது காதலியை சொல்ல முயற்சி செய்கிறார். ராஜனின் காதலுக்கு ராமதாசும் உதவுகிறார். இதற்கிடையே தான் அடித்துவிட்டு வந்த ரவுடியின் மகனின் படிப்பு செலவையும் ராஜனே ஏற்றுக்கொள்கிறார். அவனது கனவையும் நிறைவேற்றி வைப்பதாக உறுதி கூறுகிறார். கடைசியில் ராஜனை அந்த ரவுடி திருப்பி அடித்தாரா? அந்த ரவுடியின் மகனை படிக்க வைத்து, அவனது கனவை நாயகன் நிறைவேற்றி வைத்தாரா? நாயகியை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் படம் என்றாலும் காதல், ஆக்ஷன், பாசம் என நாயகன் ராஜன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் தாருஷி வரும் காட்சிகளும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ராஜனின் அம்மாவாக ரேணுகா சவுகான் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எழுத்தாளர் ஜெயபாலன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராமதாஸ் காமெடியில் கலக்கியிருக்கிறார்.

தனது கனவை நிறைவேற்ற முடியாத நாயகன், வேறொரு மாணவனின் கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதும், தன்னை அடித்துவிட்டு வெளியூருக்கு செல்லும் நாயகனை பழிவாங்க நினைக்கும் நாயகன் என வழக்கமான கதையாக இருந்தாலும், திரைக்கதையில் காமெடி, ஆக்ஷன் என ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் ரவி அப்புலு. கொடூரமான வில்லனை அடித்து டம்மி பீசாக்குவது, மீண்டும் அவன் தனது கெத்துக்கு வர போராடுவது போன்ற காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார்.

சித்தார்த்த விபினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. வி.எளையராஜாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.மொத்தத்தில் `செயல்' சிறப்பு.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து