முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்கள்

திங்கட்கிழமை, 21 மே 2018      இந்தியா
Image Unavailable

லண்டன் : செவித் திறன் குன்றியோருக்கு கல்வி கற்பிக்க பின்பற்றப்படும் லிப் ரீடிங் முறையை இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க முன்னணி ஊடகங்கள் பயன்படுத்தின. 

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி - மெகன் மார்கல் திருமணம் தொடர்பான செய்தியை சேகரிக்க உலகம் முழுவதும் இருந்து செய்தியாளர்கள் லண்டனில் முகாமிட்டிருந்தனர். இளவரசர் ஹாரியின் அருகே நின்று செய்தி சேகரிப்பது கடினம். எனவே ஹாரியும் மெகன் மார்கலும் என்ன பேசுகின்றனர் என்பதை அறிய செவித் திறன் குன்றியோருக்கு கல்வி கற்பிக்க பின்பற்றப்படும் லிப் ரீடிங் முறையை முன்னணி ஊடகங்கள் பயன்படுத்தின. இதற்காக பல்வேறு ஊடகங்கள் தரப்பில் லிப் ரீடர் நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் ஹாரியும் மெகன் மார்கலும் என்ன பேசினர் என்பதை அப்படியே பதிவு செய்தனர்.

எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் லிப் ரீடர் நிபுணர், புதுமண தம்பதியின் உதட்டு அசைவுகளை உன்னிப்பாக கண்காணித்து செய்தி சேகரித்தார். டெலிகிராப் ஊடகத்தின் லிப் ரீடரும் உன்னிப்பாக கவனித்து செய்தி சேகரித்தார்.

ஸ்கை நியூஸ் தரப்பு லிப் ரீடர் நிபுணர், இளவரசர் ஹாரியும் அவரது அண்ணன் இளவரசர் வில்லியமும் ராணுவ உடையில் ஒன்றாக நடந்து வந்தபோது அவர்களின் உதட்டு அசைவை கண்காணித்து செய்தி எழுதியுள்ளார். அவரது பதிவில் இளவரசர் ஹாரி கூறிய போது எனது பேன்ட் மிகவும் இறுக்கமாக உள்ளது என்றார். அதற்கு இளவரசர் வில்லியம் மென்மையாக புன்னகைத்தார். அவள் (மெகன் மார்கல்) வந்து விட்டாளா’ என்று ஹாரி கேட்க, இல்லை என்று பதிலளித்தார் வில்லியம். இதேபோல பல்வேறு ஊடகங்கள் லிப் ரீடர்களை பயன்படுத்தி திருமண விழாவில் செய்தி சேகரித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து