முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரசாமி பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்பு

திங்கட்கிழமை, 21 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கர்நாடக முதல்வராக நாளை புதன் கிழமை குமாரசாமி பதவியேற்கிறார். இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்.

கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி நாளை மாலை பதவி ஏற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆந்திரா, மேற்கு வங்கம், தெலுங்கானா முதல்வர்கள் உட்பட அனைத்துப் பிராந்திய முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குமாரசாமி பதவியேற்பு விழாவில் டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தேவகவுடா தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து