முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியது

திங்கட்கிழமை, 21 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது,.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6- ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதினர், இந்த தேர்வின் முடிவு கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் அவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்களுக்கு மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். இந்த நிலையில், மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொண்டனர். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாக பெற்றனர். மேலும், நேற்று பிற்பகல் முதல் பள்ளி மாணவர்களும், தனித் தேர்வர்களும் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டும் இச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து