முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் 24- ம் தேதி சபாநாயகர் தலைமையில் கூடுகிறது

திங்கட்கிழமை, 21 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சட்டசபை எத்தனை நாட்கள் நடக்கும் என்பது தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் வரும் 24-ம் தேதி கூடுகிறது,.

தமிழக சட்டசபை கூட்டம் வரும் 29-ம் தேதி காலை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இரங்கல் தீர்மானங்கள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற இருக்கிறது. இது குறித்து வரும் 24- ம் தேதி காலை 11 மணிக்கு சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டம் நடைபெறவிருப்பதாக பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபையின் மானியக் கோரிக்கை விவாதங்கள் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே தமிழக சட்டசபையின் மானியக்கோரிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அதை தொடர்ந்து நேற்று வனத்துறை, சுற்றுச்சூழல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆகிய மூன்று துறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தனித்தனியாக நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டங்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோரும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கிர்லோஸ்குமார் மதுவிலக்கு அமலாக்கத்துறையின் கூடுதல் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மற்றும் துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து