முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவின் இருண்ட பக்கத்தை ஆராயும் கியூகியோ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா

செவ்வாய்க்கிழமை, 22 மே 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: நிலவின் மர்மமான பக்கக்கங்களை ஆராய்ந்து பூமிக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் செயற்கைக் கோள் ஒன்றை சீனா நேற்று வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இச்செயற்கைக் கோளுக்கு கியூகியோ (மக்பீ பாலம்), என்று பெயரிடப்பட்டுள்ளது.

400 கிலோ கொண்ட இச்செயற்கைக்கோள் 3 ஆண்டுகளுக்கு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் அமைந்துள்ள சிசாங் செயற்கைக்கோள் விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 5:28க்கு, லாங்மார்ச் 4சி ராக்கெட் ஒன்று செயற்கைக்கோளை ஏந்திக் கொண்டு விண்ணில் பாய்ந்ததாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசின் செயற்கைக்கோள் செலுத்தும் திட்ட மேலாளர் ஸாங் லிகுவா கூறுகையில், நிலவின் மறுபக்கம் மென்மையான நிலம் என்று கூறப்படுகிறது. அந்தப் பக்கத்தை ஆராய்ச்சி செய்யும் ஒரு முக்கிய அடியை சீனா எடுத்து வைக்கிறது. அதற்கான ஆய்வு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய முதல் நாடாக சீனா திகழ்கிறது என்றார்.

கியீகியாவோ செயற்கைக்கோள் பூமியின் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் நிலவின் மறுபக்கத்திற்கும் ஒரு பாலத்தை அமைத்துத்தரும் என்று சீன விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் கடைசியில் நிலவின் மறுபக்க ஆய்வு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து